மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் மைத்துனருக்கு கத்திக்குத்து மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

குடும்ப தகராறில் மைத்துனருக்கு கத்திக்குத்து மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் மதுரா நகரை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ்(வயது 27). இவரது தங்கை சுதாவுக்கும் முல்லையூர் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜன்(25) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சுதா கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சுபாஷ்சந்திரபோஸ், சுதாவின் மகளை தளவாயில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு வந்த வசந்தராஜன் எனது குழந்தையை நீ எதற்காக பள்ளியில் சேர்க்கிறாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுபாஷ்சந்திரபோசை குத்தினார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் சுபாஷ்சந்திரபோசின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த சுபாஷ்சந்திரபோசை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய வசந்தராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்