மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: தந்தை-மகன் சாவு

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்த தந்தை, மகன் இருவரும் இறந்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சார்வாய்புதூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). இவருடைய மகன் பெரியசாமி (13). இவர்கள் இருவரும் கடந்த 6-ந் தேதி அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தந்தை, மகன் இருவரும் பலத்த காயம் அடைந்து, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் தந்தை-மகன் இருவரும் நேற்று இரவு பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு