மாவட்ட செய்திகள்

மார்த்தாண்டம் அருகே பரிதாபம் லாரி மோதி பெண் பலி டிரைவர் கைது

மார்த்தாண்டம் அருகே லாரி மோதி பெண் பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை,

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மார்த்தாண்டம் அருகே காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் பவுல். இவருடைய மனைவி அன்னம்மாள் (வயது 61). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பவுல் இறந்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் அன்னம்மாள் வெட்டுமணியில் உள்ள அந்தோணியார் ஆலயத்துக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் காப்புக்காட்டில் இருந்து வெட்டுமணிக்கு பஸ்சில் வந்து இறங்கினார். பின்னர் அவர் ஆலயத்துக்கு செல்வதற்காக நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அன்னம்மாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அன்னம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அன்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாகர்கோவிலை சேர்ந்த குமார் (52) என்பவரை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்