மாவட்ட செய்திகள்

தொழில் அதிபர் கொலை: கைதான பெண் வக்கீல் தொழில் செய்ய தடை - தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி

தொழில் அதிபரை கொன்று கடலில் உடலை வீசிய வழக்கில் கைதான பெண், வக்கீல் தொழில் செய்ய தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.

தினத்தந்தி

அடையாறு,

சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூவில் வசித்து வந்தவர் சுரேஷ் பரத்வாஜ் (வயது 50). தொழில் அதிபரான இவர் கடந்த ஜூன் மாதம் படகு மூலம் காசிமேட்டில் நடுக்கடலுக்குள் அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கடலில் வீசப்பட்டது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகளான வக்கீல் பிரீத்தி என்பவர் கூலிப்படை உதவியுடன் சுரேஷ் பரத்வாஜை கொலை செய்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்த பிரகாஷ் உள்பட 6 பேரை ஜூலை மாதம் போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த பிரீத்தியை கடந்த மாதம் அடையாறில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதன்பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரீத்தி, தொடர்ந்து வக்கீல் தொழில் செய்ய தடை விதிக்க போலீசார் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

போலீசாரின் பரிந்துரையை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு கோர்ட்டிலும் வக்கீலாக ஆஜராக பிரீத்திக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்து உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை