நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களை படத்தில் காணலாம். 
மாவட்ட செய்திகள்

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் முருக பக்தர்கள்

பொங்கல் பண்டிகை, தைப்பூசத்தை முன்னிட்டு, நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக ஏராளமான முருக பக்தர்கள் செல்கின்றனர்.

தினத்தந்தி

திருச்செந்தூர் கோவில்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரையாக சென்று வழிபட்டு வருகிறார்கள். தைப்பூசம், பொங்கல் பண்டிகை, புத்தாண்டு, வைகாசி விசாகம், மாசி திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழா நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு செல்வது வழக்கம்.

பாத யாத்திரை பக்தர்கள்

அதன்படி பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வரும் பக்தர்களும் குழுக்களாக திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக புறப்பட்டு செல்கின்றனர்.

பெரும்பாலான பக்தர்கள் பச்சை நிற ஆடை அணிந்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக கோவிலுக்கு செல்கின்றனர். இதனால் நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோடு பகுதியில் வழிநெடுகிலும் முருக பக்தர்களாகவே காட்சி அளிக்கின்றனர்.

நெல்லை பகுதியில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவப்படத்தை வைத்து அவரது திருப்புகழை பாடியவாறு செல்கின்றனர். பாத யாத்திரை பக்தர்கள் ஆங்காங்கே தாமிரபரணி ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும் நீராடி, இளைப்பாறிய பின்னர் திருச்செந்தூருக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு