மாவட்ட செய்திகள்

சிறுவன் மர்ம சாவு

சிறுவன் மர்மமான முறையில் இறந்தான்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை காலனி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் இரணியன்(வயது 16). இவர் நேற்று முன்தினம் காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சென்று இளநீர் பறித்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த சிறுவன் சோர்வாக இருந்ததை கண்டு, அவரது பெற்றோர் கேட்டபோது காட்டில் ஏதோ விஷ ஜந்து கடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் இரணியனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்