இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது விலை உயர்ந்த நாய் குட்டியை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதில் ஒருவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நபர்போல் சீருடை அணிந்து இருந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.