மாவட்ட செய்திகள்

நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 26½ டன் காய்கறிகள் சுமார் ரூ.8½ லட்சத்துக்கு விற்பனையானது.

நாமக்கல்,

நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர், புதுச்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த சந்தைக்கு விடுமுறை நாளான நேற்று 26 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன. இந்த காய்கறிகள் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 730-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 6 ஆயிரத்து 655 பேர் வாங்கி சென்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.26-க்கும், கத்தரி ரூ.44-க்கும், வெண்டை ரூ.24-க்கும், புடலங்காய் ரூ.24-க்கும், பீர்க்கன் ரூ.40-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீட்ரூட் ரூ.48-க்கும், பீன்ஸ் ரூ.44-க்கும், இஞ்சி ரூ.60-க்கும், காளான் கிலோ ரூ.175-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.54-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

புரட்டாசி மாதம் தொடங்கி இருப்பதால் இந்துக்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தைக்கு வழக்கத்தை காட்டிலும் காய்கறிகள் வரத்து அதிகரித்து இருப்பதாகவும், அதன் விலையும் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்