மாவட்ட செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 81 வழக்குகளுக்கு தீர்வு

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி சுபாதேவி தலைமையில் நடந்தது.

தினத்தந்தி

பெரம்பலூர்,

உச்ச நீதிமன்றம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்பேரில், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி சுபாதேவி தலைமையில் நடந்தது. இதில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி, மகிளா நீதிமன்ற நீதிபதி கிரி, குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதி தனசேகரன், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா, சார்பு நீதிபதி ஷகிலா, நீதித்துறை நடுவர்கள் அசோக்பிரசாத், கருப்பசாமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், வேப்பந்தட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி செந்தில்ராஜா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு வழங்கியது.

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனை வழக்குகள், சொத்து சம்பந்தமான சிவில் வழக்குகள் மற்றும் சிறு அளவிலான குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 81 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 82 லட்சத்து 59 ஆயிரத்து 307-க்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு பெறப்பட்ட வழக்கின் வழக்குதாரருக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுபாதேவி, நஷ்ட ஈடு தொகைக்கான காசோலையை வழங்கினார். இதில் வக்கீல்கள் கலந்து கொண்டனர். 223 மனுதாரர்கள் பயனடைந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு