மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி.க்கு மூச்சுத்திணறல் மும்பை ஆஸ்பத்திரிக்கு மாற்றம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி.க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மும்பை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

மும்பை,

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தவர் நடிகை நவ்னீத் ராணா. இவர் மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார்.

அண்மையில் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நவ்னீத் ராணா, அவரது கணவரும், எம்.எல்.ஏ.வுமான ரவிராணா, குழந்தைகள் என குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டில் இருந்த படியே நவ்னீத் ராணா சிகிச்சை பெற்று வந்தார்.

மும்பை ஆஸ்பத்திரிக்கு மாற்றம்

இந்தநிலையில் நடிகை நவ்னீத் ராணா உடல் நலம் சரியாகாததால், கடந்த 6-ந்தேதி நாக்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள லீலாவதி தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டார். அவருடன் கணவர் ரவி ராணாவும் மும்பை வந்தார்.

தற்போது லீலாவதி ஆஸ்பத்திரியில் நவ்னீத் ராணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்