மாவட்ட செய்திகள்

ஆலங்குளம் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் பட்டதாரி இளம்பெண் தற்கொலை - சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் போலீசில் புகார்

ஆலங்குளம் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி குடும்பத்தினர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள காசியாபுரம் அண்ணா தெருவைச் சேந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 34). இவர் நெல்லையில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். பாவூர்சத்திரம் அருகே பொடியனூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் ரேவதி (31). எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கும், பாலகிருஷ்ணனுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ரேவதி நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ரேவதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ரேவதியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை கணவரின் குடும்பத்தினர் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாகவும் கூறி, ரேவதியின் தந்தை ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று காலையில் ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து புகார் மனு வழங்கினர்.

திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்ததால், தென்காசி உதவி கலெக்டர் கோகிலா மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்