மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே ரூ.2,000 கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் சிக்கினார் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்த வாலிபர் ரூ.2,000 நோட்டை கொடுத்து சிகரெட் பாக்கெட் வாங்கினார். அந்த நோட்டை பார்த்ததும் சந்தேகம் அடைந்த கடைக்காரர் அது குறித்து கேட்டுள்ளார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.

தினத்தந்தி

ஆம்பூர்,

கடைக்காரர் சத்தம் போடவே அங்கு இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து அவரது பாக்கெட்டை பார்த்த போது 2,000 ரூபாய் நோட்டுகள் 7 இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது, ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த சதாம்உசேன் (வயது 28) என்பதும், அவரிடம் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுத்து இருப்பதும் தெரியவந்தது.

மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, இதுவரை ரூ.30 ஆயிரம் வரை மாற்றி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவருக்கு அந்த நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தது யார்? இதற்கு பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்