மாவட்ட செய்திகள்

பேளுக்குறிச்சி அருகே, தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு

பேளுக்குறிச்சி அருகே, குடும்ப தகராறில் தீக்குளித்த ஆட்டோ டிரைவர் இறந்தார்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள சிங்களாந்தபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா (34). இவர்களுக்கு ஹாசின்தேவ் (3) என்ற மகன் இருக்கிறான்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனம் உடைந்து காணப்பட்ட சதீஷ்குமார் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் உயிருக்கு போராடிய அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று காலை இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்