மாவட்ட செய்திகள்

தேசூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு மற்றொருவர் படுகாயம்

தேசூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சேத்துப்பட்டு,

தேசூரை அடுத்த ஜெங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 20). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த நரேஷ் (19). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தேசூரில் நடைபெற்ற அவர்களது நண்பர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ஜெங்கம் பூண்டி நோக்கி வந்தனர்.

தேசூரில் குண்ணகம்பூண்டி வழியாக அவர்கள் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைத் தடுமாறி சாலையில் சரிந்து விழுந்தது.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விக்னேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நரேஷ் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேசூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த நரேசை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த விக்னேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்