மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

திண்டுக்கல் அருகேயுள்ள சாணார்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

கோபால்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியில் திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் போலீசார் நேற்று மாலை 6.30 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சார்பதிவாளர் சாந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அலுவலகத்துக்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் கோபால்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பத்திர எழுத்தர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்காமல் அலுவலக வாசலை பூட்டினர்.

பின்னர் அலுவலகத்தின் பின்பகுதியில் சுற்றுச்சுவர் அருகே ஆவணங்கள், பணம் ஏதேனும் வீசப்பட்டு உள்ளதா? என்பது குறித்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால் அங்கு பணம், ஆவணங்கள் எதுவும் இல்லை. தொடர்ந்து, அலுவலகத்துக்குள் சுமார் 3 மணி நேரமாக சார்பதிவாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு