மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகள் அனு என்கிற நிஷாந்தினி (வயது 15). இவர் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனாவால் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நிஷாந்தினியிடம் வீட்டுவேலை செய்யாமல் ஏன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய் என கேட்டு அண்ணாமலை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நிஷாந்தினியை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிஷாந்தினியின் தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு