மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே: லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு

காஞ்சீபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சீபுரம்,

சின்ன காஞ்சீபுரம், ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம் (வயது 20). இவர் மோட்டார் சைக்கிளில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை காஞ்சீபுரம் அருகே சேக்காங்குளம் ஜங்சன் என்ற இடத்தில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது அதே வழியாக வந்த ஒரு கன்டெய்னர் லாரி திடீரென திரும்பியது. அப்போது மோட்டார்சைக்கிள் லாரியில் பயங்கரமாக மோதியது. இதில் கவுதம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு