மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை

காஞ்சீபுரம், அருகே லாரி மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த தூசி அருகே உள்ள பூனைதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 37). லாரி மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார்சைக்கிளில் தூசியில் இருந்து காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளைக்கேட் தாமரைதாங்கல் என்ற இடத்திற்கு சென்றார். சாலையின் ஒதுக்குபுறமாக தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்.

தான் கொண்டு வந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். சிறிது நேரத்தில் தீயில் கருகி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த ராஜசேகருடைய மனைவி ஏற்கெனவே அவரை விட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் கடன் தொல்லையால் தீக்குளித்தாரா?, மனைவி பிரிந்த ஏக்கத்தில் தீக்குளித்தாரா? என்பது குறித்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு