மாவட்ட செய்திகள்

காட்டாங்கொளத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி மூதாட்டி சாவு

காட்டாங்கொளத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள கொருக்கதாங்கள் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சுசீலா (வயது 65). நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர். பின்னர் வீடு திரும்பவில்லை, அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கொருக்கதாங்களில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் வயதான பெண் ஒருவர் மூழ்கி இறந்து கிடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் மூழ்கி இருந்த அந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

அவர் மாயமான சுசீலா என்பது தெரியவந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு