மாவட்ட செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே, மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

காட்டுமன்னார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.

காட்டுமன்னார்கோவில்,

நாகப்பட்டினம் மாவட்டம் பள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் ஜெயபிரகாஷ் (வயது 28), எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மோவூரை சேர்ந்த செல்வம் (52) என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் மின் இணைப்பு கொடுத்து, மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், உடனே ஜெயபிரகாசை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஜெயபிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து லட்சுமணன் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு