மாவட்ட செய்திகள்

கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார்சைக்கிளிலிருந்து விழுந்து கர்ப்பிணி சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே குறுக்கே வந்த நாய் மீது மோட்டார்சைக்கிள் மோதியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 20). இவர் கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று ராஜேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையொட்டி ராஜேஸ்வரியை அவரது கணவர் வெங்கடேசன் சிகிச்சைக்காக மோட்டார்சைக்கிளில் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் சிகிச்சை முடிந்து மனைவியுடன் வெங்கடேசன் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சோமாசிபாடியை நெருங்கியபோது திடீரென ரோட்டின் குறுக்கே வந்த நாய் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜேஸ்வரியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு