மாவட்ட செய்திகள்

கூடலூர் அருகே தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

கூடலூர் அருகே தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருகின்றன.

கூடலூர்,

கூடலூர் வன கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. கேரள- கர்நாடகா வனங்களின் கரையோரம் கூடலூர் பகுதி உள்ளது. இதனால் 3 மாநில வனப்பகுதிகளிலும் உள்ள வனவிலங்குகள் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கு ஏற்ப இடம் பெயர்ந்து வருகின்றன. எனவே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக கூடலூர் விளங்குகிறது. இந்த நிலையில் கூடலூர் தாலுகா ஓவேலி, நாடுகாணி, தேவாலா உள்ளிட்ட இடங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மாதக்கணக்கில் முகாமிட்டு வருகின்றன.

மேலும் ஒவ்வொரு நாளும் விவசாய பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்கின்றன. தொடர்ந்து வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க அந்தந்த வனச்சரகத்தின் கீழ் பணியாற்றும் வனச்சரகர், வனவர், வன காப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் இரவு- பகலாக ஈடுபட்டு வருகின்றனர். உயரதிகாரிகளின் உத்தரவை பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தால் ஓய்வின்மை, கூடுதல் பணிச்சுமையால் அவர்கள் தவித்து வருகின்றனர்.

கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி சூண்டி, காந்திநகர், பார்வுட், ஹெலன், ஆரோட்டுப்பாறை உள்ளிட்ட பகுதியில் தேயிலை தோட்டங்களில் குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. மேலும் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்பதற்காக குட்டி யானைகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து கடைகள், வீட்டு கதவுகளை உடைக்கின்றன. எனவே குட்டி யானைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினரும் உறுதி அளித்துள்ளனர். மேலும் வன ஊழியர்கள் இரவு- பகலாக கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானைகள் நடமாட்டம் குறித்த தகவல் வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட வேண்டும் என வன உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் பொதுமக்களிடம் இருந்து தகவல் வந்த உடன் நேரடியாக சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எந்த பலனும் ஏற்பட வில்லை. தொடர்ந்து காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்