மாவட்ட செய்திகள்

கொட்டாம்பட்டி அருகே பெண் கொலை; கள்ளக்காதலன் கைது

கொட்டாம்பட்டி அருகே பெண் கொலையில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

கொட்டாம்பட்டி,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சின்னையா. இவருடைய மகள் சின்னம்மாள் (வயது 40). திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்தார்.

அதே ஊரைச் சேர்ந்தவர் திரவியம்(48). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்டார். இந்தநிலையில் சின்னம்மாளுக்கும், திரவியத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவர்கள் அங்குள்ள தென்னந்தோப்பில் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

கடந்த 2-ந்தேதி திரவியத்துக்கு சொந்தமான கிணற்றின் அருகே சின்னம்மாள் கழுத்தில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். திரவியத்தை காணவில்லை. மயங்கி கிடந்த சின்னம்மாளை பார்த்து, அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனையில் சின்னம்மாள் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த சின்னம்மாளின் சகோதரர் செல்வம் கொட்டாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி திரவியத்திடம் சின்னம்மாள் வற்புறுத்தி வந்தார். ஆனால் அதற்கு மறுத்த திரவியம் இரும்பு கம்பியால் தாக்கி சின்னம்மாளை கொலை செய்து இருக்கலாம் என குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் கள்ளக்காதலன் திரவியம் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு