மாவட்ட செய்திகள்

குன்றத்தூர் அருகே, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

குன்றத்தூர் அருகே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தம்பாக்கம் பகுதியில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதி முழுவதும் மூடி சீல் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்கள் முழு ஊரடங்கு என்பதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்து இருந்தது. இதனால் காலையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு சென்றபோது கடைகள் திறக்கப்படாமல் அடைக்கப்பட்டு இருந்தது. அப்போதுதான் குன்றத்தூர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 3-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்கள் ஏதும் கிடைக்காததால் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து அந்த பகுதி வியாபாரிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த குன்றத்தூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது வியாபாரிகள், 4 நாட்களுக்கு பிறகு கடை திறக்கப்படுவதால் தேவையான பொருட்களையும் வாங்கி வந்து விட்டோம். ஆனால் அதிகாரிகள் எந்த முன் அறிவிப்பும் செய்யாமல் 3-ந்தேதி வரை முழு ஊரடங்கு போடப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர் என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, குன்றத்தூர், மாங்காடு பேரூராட்சிகளில் 3-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்களில் வீடுகளுக்கே வந்து காய்கறிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கூறினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு