மாவட்ட செய்திகள்

மறைமலைநகர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

மறைமலைநகர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வேண்டாம்மாள் (வயது 58), இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர் கடந்த 13-ந்தேதி வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்து (விஷம்) குடித்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு