மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் அருகே உள்ள விநாயகநல்லூர் பகுதிக்கு சரிவர குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
இதை கண்டித்து நேற்று காலை திடீரென அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் மதுராந்தகம்-வேடந்தாங்கல் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஊராட்சி செயலாளரும் முறையாக தண்ணீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.