மாவட்ட செய்திகள்

மயிலம் அருகே: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சாவு

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழந்தார்.

மயிலம், நவ.12-

மயிலம் அருகே உள்ள கீழ்மயிலத்தை சேர்ந்தவர் கோதண்டராமன்(வயது 66). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி மாநிலம் திருக்கனூருக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் தழுதாளி அருகே தென்கொளப்பாக்கம் சாலையில் திரும்ப முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கோதண்டராமன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கோதண்டராமன் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோதண்டராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோதண்டராமனின் மகன் ரகு மயிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு