மாவட்ட செய்திகள்

வேப்பந்தட்டை அருகே, பூட்டை உடைத்து டாஸ்மாக் கடையில் பணம்- மது பாட்டில்கள் திருட்டு

வேப்பந்தட்டை அருகே, டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம்- எசனை சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக கரிகாலன் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

திருட்டு

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அரும்பாவூர் போலீசில் கரிகாலன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு