மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - அழகான பெண் குழந்தை பிறந்தது

நெல்லை அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி செல்வசாரிஸ். இவருடைய மனைவி ரஜிலா (வயது 31). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் பலவீனமாக இருப்பதாக கூறி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகே ஆம்புலன்சு சென்றபோது, ரஜிலாவிற்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து உடனடியாக டிரைவர் கல்யாணசுந்தரம் ஆம்புலன்சை சாலை ஓரம் நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி பிரசவம் பார்த்தார்.

மதியம் 1.15 மணிக்கு ரஜிலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது ரஜிலாவிற்கு 3-வது பிரவசம் ஆகும். தாயும், குழந்தையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். திசையன்விளை ஆம்புலன்சில் நேற்று பிறந்தது 12-வது குழந்தையாகும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்