மாவட்ட செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி டிரைவர் பலி

ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார்.

தினத்தந்தி

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரின் மகன் சுரேஷ் (வயது 41). லாரி டிரைவர். இவருக்கு குருலட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். குருலட்சுமியின் வீடு பசுவந்தனை அருகே உள்ள வடக்கு கைலாசபுரத்தில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சுரேஷ் தனது மனைவி வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

வாலசமுத்திரம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் வேலை நடப்பதால், அந்த சாலை திருப்பி விடப்பட்டு அங்கு ஒரு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுரேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு