மாவட்ட செய்திகள்

படப்பை அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

படப்பை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

தினத்தந்தி

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாகாண்யம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய், (வயது 25). அதே மாகாண்யம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தேவா (26).

நண்பர்களான இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆப்பூர் கொளத்தூரில் உள்ள தங்கள் நண்பருடைய மகனின் பிறந்த நாள் விழாவுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி அருகே வரும்போது முன்னால் சென்ற லாரி மீது இடிக்காமல் இருப்பதற்காக திடீரென பிரேக் பிடித்தார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த தேவா படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த தேவாவை மீட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது