மாவட்ட செய்திகள்

பொன்னேரி அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த தம்பதி கணவர் சாவு, மனைவி கவலைக்கிடம்

பொன்னேரி அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற மனைவி கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொன்னேரி,

பொன்னேரி அருகே புலிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 30). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விரக்தியடைந்த இருவரும் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தனர்.

மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்த பெற்றோரை கண்ட குழந்தைகள் அலறி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சண்முகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

லட்சுமி கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்