மாவட்ட செய்திகள்

செஞ்சி அருகே, மோட்டார் சைக்கிளுடன் கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் பலி

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிளுடன் கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் மலையப்பன் மகன் சார்லஸ் என்ற ராகுல்(வயது 30), கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு செஞ்சியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். கலர்பாளையம்-ஜம்போதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நாய் ஒன்று திடீரென குறுக்கே ஓடியது. இதைபார்த்த ராகுல் நாய் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை இடதுபுறமாக திருப்பினார். அப்போது அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சாலையோரம் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கிணற்றின் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுபற்றி செஞ்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு