மாவட்ட செய்திகள்

சின்னசேலம் அருகே கார் மோதி திருநங்கை பலி

சின்னசேலம் அருகே கார் மோதி திருநங்கை பரிதாபமாக உயிரிழந்தார்.

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே உள்ள இந்திலி காமராஜர் நகரை சேர்ந்தவர் தங்கவேல் மகள் இளையராணி (வயது 40). இவர் திருநங்கை ஆவார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மணிபாலில் இருந்து திருநங்கையான ரமணா(29) என்பவர் கள்ளக்குறிச்சிக்கு வந்தார். அப்போது இளையராணி ரமணாவை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் ரமணாவை தனது வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரமணா, சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு அவர் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அந்த சமயத்தில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் ரமணா மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான ரமணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இளையராணி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்