மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்புரவு தொழிலாளி கொலை வழக்கில் 15 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக துப்புரவு தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலாஜாபாத்,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவசுந்தரமூர்த்தி (வயது 31). துப்புரவு தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி கீவளூர் கிராமத்தின் குளக்கரை அருகே இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் தேவசுந்தரமூர்த்தியிடம் தகராறு செய்து கத்தியால் அவரை வெட்டிக் கொலை செய்தனர்.

விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்களுக்கும், கீவளூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அந்த தகராறின் அடிப்படையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தேவசுந்தரமூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு