மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் சாவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியானார்.

தினத்தந்தி

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 30). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நேற்று சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது