மாவட்ட செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய காளையர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஜல்லிக்கட்டை சந்திரபிரபா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 250 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை விவேகத்துடன் வீரர்கள் அடக்கி தங்களின் வீரத்தை நிரூபித்தனர். வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளைகளை பிடிக்க ஒரு குழுவிற்கு 40 பேர் வீதம் களமிறக்கப்பட்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மாடு பிடிக்கும் போது காயம் அடையும் வீரர்களின் அவசர உதவிக்கு 3 ஆம்புலன்ஸ்கள், ஒரு தீயணைப்பு வாகனம், 3 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருந்தன. 200-க்கும் மேற்பட்ட போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு