மாவட்ட செய்திகள்

தென்காசி அருகே வீட்டில் கஞ்சா விற்ற பெண் கைது ரூ.2¼ லட்சம் பறிமுதல்

தென்காசி அருகே வீட்டில் வைத்து கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

தென்காசி,

தென்காசி அருகே ஆயிரப்பேரியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக குற்றாலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, ஜான் போஸ்கா மற்றும் போலீசார் அந்த வீட்டில் சென்று சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக வைக்கோல் படப்புக்குள் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில், ரூ.2 லட்சம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்தவர் பார்வதி (வயது 70) என்பதும், இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், வீட்டில் வைத்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் பார்வதியை கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த 2 கிலோ கஞ்சாவையும், ரூ.2 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது