மாவட்ட செய்திகள்

படப்பை அருகே சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த 2 பேர் கைது

படப்பை அருகே சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த எருமையூர் பைபாஸ் அருகே உள்ள சோமங்கலம்- தாம்பரம் சாலையில் சோமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசங்கர் நேற்று முன்தினம் மாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையில் 2 பேர் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுகொண்டு அந்த வழியாக வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்த போது வரதராஜபுரம் ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 36) மற்றும் அவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (39) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது