மாவட்ட செய்திகள்

படப்பை அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் பலி

படப்பை அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதியதில், வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி அண்ணாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவருடைய மகன் பாலாஜி என்கிற சோனு (வயது 22). இவர் ஓரகடம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் படப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். செரப்பனஞ்சேரி வெள்ளரித்தாங்கல் அருகே செல்லும்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு