மாவட்ட செய்திகள்

கடையம் அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம் - நெற்பயிர்கள் நாசம்

கடையம் அருகே விளை நிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்தன.

தினத்தந்தி

கடையம்,

நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோவிந்தபேரி, அழகப்பபுரம், சிவசைலம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, சம்பன்குளம் உள்பட பல கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் மிளா, மான், கரடி, காட்டுப்பன்றி போன்றவை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் சிவசைலத்தை சேர்ந்த குமார் என்பவர் 1 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்கள் பயிரிட்டு இருந்தார். மேலும் அந்த பயிர்களை சுற்றி வேலி அமைத்து இருந்தார். சம்பவத்தன்று குமாருக்கு சொந்தமான நிலத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தியது.

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடையம் ஒன்றிய செயலாளர் முத்துராஜனுக்கு சொந்தமான நிலம் பெத்தான்பிள்ளை குடியிருப்பு அருகே உறிஞ்சி மடையில் உள்ளது. இதில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தின. மேலும் இந்த பகுதியில் விவசாயிகள் பயிரிட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடையம் வனத்துறையினர் காட்டுப்பன்றிகளால் சேதமான நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்