மாவட்ட செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே, குடிநீர் பிரச்சினையால் கிராம மக்கள் அவதி

தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் பிரச்சினையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது மேகலகவுனூர் கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சிலர் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மோட்டாரில் இருந்து தண்ணீர் எடுத்து செல்வதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் கூறினார்கள்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே, மேகலகவுனூர் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை