மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருகே, குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்

திருச்செந்தூர் அருகே குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே மேல திருச்செந்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழநாலுமூலைக்கிணறு பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு எல்லப்பநாயக்கன் குளத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டு அங்கு இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், பெண்கள் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் பெண்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்