மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

திருவள்ளூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் இருளர் மேடு பகுதியை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் முருகன்(வயது 23). இவர் கடந்த 20-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது மேம்பாலத்தின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முருகனுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு