மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே தொழிலாளி அடித்துக்கொலை

திருவள்ளூர் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள இருளப்பாளையம் பகுதியில் உள்ள கோவில் அருகே தங்கி இருந்தவர் பெருமாள் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகா நரசிங்கபுரம் கிராமம். இவர் இரவு நேரங்களில் மது குடித்துவிட்டு அடிக்கடி கூச்சலிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் தலை மற்றும் உடலில் படுகாயத்துடன் இறந்து கிடந்தார். கோவில் அருகே தங்கி இருந்த அவரை யாரோ தடியால் அடித்து கொலை செய்துள்ளனர். அவரது உடலுக்கு அருகே தடி இருந்தது.

இது குறித்து குத்தம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை அடித்து கொலை செய்தது யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு