தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தட்டப்பாறை விலக்கில் வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் முறையான ஆவணங்கள் இன்றி ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மாரியப்பன் (வயது 23) என்பவரை கைது செய்தார். 3 யூனிட் ஆற்று மணல் மற்றும் லாரியையும் பறிமுதல் செய்தார்.