மாவட்ட செய்திகள்

திருச்செங்கோடு அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் டிரைவர்கள் கைது

திருச்செங்கோடு அருகே, மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதன்பேரில் திருச்செங்கோடு அருகே உள்ள போக்கம்பாளையம் பகுதியில் திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேல் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அடுத்தடுத்து வந்த 2 லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த லாரிகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டிவந்த சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த மூர்த்தி (வயது 24), சேலத்தை சேர்ந்த கதிர்வேல் (54) ஆகிய இருவரையும் கைது செய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். மணல் எங்கு, யாருக்காக கடத்திச்செல்லப்பட்டது என அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்