மாவட்ட செய்திகள்

திருக்கடையூர் அருகே மரத்தில் காரை மோதி பெண் பலி; 7 பேர் காயம்

திருக்கடையூர் அருகே மரத்தில் காரை மோதிய விபத்தில் பெண் பலியானார். 7 பேர் காயம் அடைந்தனா. இதுபற்றிய விவரம் வருமாறு.

தினத்தந்தி

திருக்கடையூர்,

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த குமரேசன்(வயது 30) என்பவா தனது குடும்பத்தினருடன் காரில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தார். காரை குமரேசன் ஓட்டி சென்றார்.

கார் சீர்காழி-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆக்கூர் முக்கூட்டு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவ ஊழியர்கள் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி(29) என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் குமரேசன்(30), கமல்ராஜ்(27), லோகநாயகி(43), கவுசிகா(10), பொன்னி(29), நித்திஷ்(5), ரக்ஷா(3) ஆகிய 7 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர்கள், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரந்து வந்து விபத்தில் பலியான ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை