நல்லூர்,
திருப்பூர்-பெருந்தொழுவு சாலையில் உள்ள அமராவதி பாளையம் சத்யா காலனி 5-வது வீதியை சேர்ந்தவர் அருண் (வயது 48). இவர் வீரபாண்டி பகுதியில் டையிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது சகோதரி மகள் திருமணம் நேற்று காலை சிவன்மலையில் நடை பெற்றது.
இதற்காக உறவினர்கள் பலர் நேற்று முன்தினம் அருண் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் நேற்று காலை 5.30 மணி அளவில் சிவன்மலையில் நடைபெறும் திருமணத்திற்கு புறப்பட்டு சென்றனர். அதன் பின்னர் அருண் வீட்டை பூட்டி விட்டு காரில் தனது குடும்பத்துடன் சிவன்மலைக்கு சென்றார்.
இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் மதியம் 2.30 மணி அளவில் அருண் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டிற்கு திரும்பி வந்தார். பின்னர் வீட்டின் முன்பக்க கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றார். அப்போது வீட்டின் உள்ளே படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அத்துடன் கட்டில் மீது துணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் பீரோவை பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் திருமணத்திற்கு வந்த தங்கள் உறவினர் வைத்து விட்டு சென்ற பையில் இருந்த செல்போன் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
உடனடியாக இது குறித்து திருப்பூர் புறநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். அதன்பேரில் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அத்துடன் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக் கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி அந்த வீதியில் சிறிது தூரம் ஓடிய பின்னர் அங்குள்ள சந்திப்பில் நின்று விட்டது.
போலீசார் நடத்திய விசார ணையில், தொழில் அதிபர் அருண் திருமண மத்திற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றதை நன்கு அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள் ளனர். வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்று முடியாததால் பின்பக்கமாக சென்று வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே புகுந்துள்ளனர். பின் னர் படுக்கை அறையில் பீரோவில் இருந்த நகை -பணத்தை திருடியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். பட்டப் பகலில் தொழில்அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.