மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே, பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ம.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் சத்தியபாலா(வயது 16). இவர் நடைபெற்று முடிந்த பிளஸ்-2 தேர்வில் 462 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்த நிலையில் சத்தியபாலா, தனக்கு மேற்படிப்பு படிக்க ஆசை இருப்பதாக தனது தாய் வாடாமல்லியிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு வாடாமல்லி, மேற்படிப்பு படிக்க வைக்க தன்னிடம் பணம் இல்லை. இதனால் உன்னுடைய படிப்பை நிறுத்திவிட வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சத்தியபாலா, சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்தியபாலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாடாமல்லி திருநாவலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு